செய்திகள்

காந்தி ஜெயந்தி: ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலரஞ்சலி

Published On 2017-10-02 03:43 GMT   |   Update On 2017-10-02 03:43 GMT
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த் தலைவர் அத்வானி மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர்.

காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, ‘பாபுவுக்கு தலைவணங்குகிறேன்’ என்று டுவிட் செய்துள்ளார். மேலும், அவரது உன்னதமான சிந்தனைகள் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உந்துதலாக உள்ளது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நினைவிடத்திலும் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

Similar News