செய்திகள்

முழுக்க பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் மையம் - மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

Published On 2018-05-14 14:25 GMT   |   Update On 2018-05-14 14:25 GMT
பஞ்சாப் மாநிலத்தில் முழுக்க பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா இன்று தொடங்கி வைத்தார். #PostOfficePassportSevaKendra

சண்டீகர்:

பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா நகரில் தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா இன்று தொடங்கி வைத்துள்ளார்.

நாட்டின் 192வது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆக செயல்படும் இதற்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இந்த சேவை மையம் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து ஊழியர்களும் பெண்களாக பணியாற்றுகின்றனர்.  இதுபற்றி மந்திரி விஜய் சம்ப்லா கூறுகையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும் என கூறியுள்ளார்.



இதுகுறித்து ஜலந்தர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கில் கூறுகையில், பாஸ்போர்ட் துறையின் ஆய்வு அதிகாரி மாதுரி பவி தலைமையில் பக்வாரா மையம் இயங்கும்.  அஞ்சலக உதவியாளர்களாக இரு பெண்  ஊழியர்கள் செயல்படுவர் என கூறியுள்ளார்.  ஜலந்தர் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். #PostOfficePassportSevaKendra
Tags:    

Similar News