செய்திகள்

சிறந்த முகநூல் பக்கம் பட்டியலில் முதலிடம் பிடித்த கேரளா சுற்றுலாத்துறை

Published On 2018-05-17 09:46 GMT   |   Update On 2018-05-17 09:46 GMT
2017-ம் ஆண்டிற்கான சிறந்த முகநூல் பக்கம் பட்டியலில் கேரளா சுற்றுலாத்துறை பேஸ்புக் பக்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. #KeralaTourism #Facebook
திருவனந்தபுரம்:

பேஸ்புக் நிர்வாகமானது இந்தியாவின் 2017-ம் ஆண்டிற்காக மிகச்சிறந்த பேஸ்புக் பக்கத்திற்காக தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில், உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தளமான கேரளா சுற்றுலா அமைச்சகத்தின் பேஸ்புக் பக்கம் முதலிடம் வகிக்கிறது.



இந்த பேஸ்புக் பக்கத்தை 1.5 மில்லியன் நேயர்கள் லைக் செய்துள்ளனர். கேரளாவானது சுற்றுலாத் தளங்களில் மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. இதற்கான விருதை கேரளா சுற்றுலா துறையின் இயக்குநர் பி. பாலா கிரன் பெற்றுக்கொண்டார். இதற்கு சுற்றுலாத்துறை மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கேரளாவிற்கு அடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் சுற்றுலா துறை பேஸ்புக் பக்கங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், டிசம்பர் 31ஆம் தேதி வரை, பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்தவர்கள், கருத்து தெரிவித்தவர்கள், லைக் செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டதாக, பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #KeralaTourism #Facebook

Tags:    

Similar News