செய்திகள்
கர்நாடகாவில் மழை வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 5 பேர் பலி
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் மழை மற்றும் வெள்ளம் பெருக்கால் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். #KarnatakaMonsoon
பெங்களூரு :
கர்நாடகாவில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மும்பை கர்நாடகா பகுதிகளில் மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தர்வாட் மாவட்டத்தில் ஒருவரும், மாண்டியா மாவட்டம் நாரயணபுரா பகுதியில் ஒருவரும் என இடி தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூர் புறநகர் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். மேலும், மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிக்பல்லாபூர் மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்து ஒருவரும், பல்காவி பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவரும் உயிரிழந்தனர்.
மேலும், கன மழையினால் ராம்நகரம் மாவட்டத்தில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மீட்பு பணிக்காக மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் மழை மற்றும் வெள்ளத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளனர். #KarnatakaMonsoon