செய்திகள்

ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை கவர்னராக மகேஷ் குமார் ஜெயின் நியமனம்

Published On 2018-06-04 10:17 GMT   |   Update On 2018-06-04 10:17 GMT
ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #MKJain #RBI
புதுடெல்லி:

இந்திய அரசின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவி வகித்து வருகிறார். துணை கவர்னர்களாக பி.பி.கனுன்கோ, விரால் வி.ஆச்சார்யா, என்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நான்காவது துணை கவர்னராக  மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

வங்கி மற்றும் நிதித்துறையில் 30 ஆண்டுகால அனுபவமுள்ள மகேஷ் குமார் ஜெயின் இதற்கு முன்னர் ஐ.டி.பி.ஐ. வங்கி நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவியில் மூன்றாண்டுகளுக்கு நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #MKJain #RBI
Tags:    

Similar News