செய்திகள்

அமிதாப் பச்சன் வீட்டை காட்டுவதாக இத்தாலி பெண்ணை கற்பழித்தவர் தலைமறைவு

Published On 2018-07-01 12:26 GMT   |   Update On 2018-07-01 12:26 GMT
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டை காட்டுவதாக கூறி காருக்குள் இத்தாலி பெண்ணை கற்பழித்த நபரை மும்பை போலீசார் தேடி வருகின்றனர். #ItalianrapedinMumbai
மும்பை:

இத்தாலி நாட்டை சேர்ந்த 37 வயது பெண் இந்தியாவை சுற்றிப்பார்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் டெல்லி வந்தார்.

ஜூன் மாதம் 11-ம் தேதி மும்பைக்கு வந்த அந்தப் பெண் ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளர் மூலம் பேருந்தில் சென்று மும்பை நகரின் முக்கிய பகுதிகளை பார்வையிட்டார்.

அப்போது, தன்னை சுற்றுலா வழிகாட்டி என்று அறிமுகப்படுத்திகொண்ட ஒருவர் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டை காட்டுவதாக கூறி அழைத்தார்.

இதை நம்பிய அந்தப் பெண்ணை கடந்த 14-ம் தேதி காரில் ஏற்றிசென்ற பின்னர், அவர் தங்கியுள்ள ஓட்டலில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்தார். போகும் வழியில் மதுக்கடையில் காரை நிறுத்தி மது வாங்கி வந்தார்.

காரில் இருந்த இத்தாலி பெண்ணை மது அருந்துமாறு வற்புத்தி கற்பழித்ததாக இத்தாலி தூதரகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜுஹு போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றர். #ItalianrapedinMumbai
Tags:    

Similar News