செய்திகள்

பயங்கரவாதி சையத் சலாஹூதீனின் மகன் கைது - என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

Published On 2018-08-30 06:06 GMT   |   Update On 2018-08-30 06:06 GMT
ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவனின் மகன் கைது செய்யப்பட்டான்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தலைவன் சையத் சலாஹுதினின் 2-வது மகன் சையத் ஷகீல் அகமது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சையத் ஷகீல் அகமது காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் மூத்த ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.  

சையத் சலாஹூதீனின் மற்றொரு மகன் சையத் ஷாகீத்தை என்ஐஏ பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #NIA #HizbulMujahideen #SyedSalahuddin
Tags:    

Similar News