செய்திகள்
மாரத்தான் போட்டியில் கால் தடுக்கி தவறி விழுந்த கர்நாடக மந்திரி
கர்நாடகா மாநிலம், மைசூருவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மந்திரி ஜி.டி. தேவகவுடா கால் தடுக்கி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GTDevegowda
பெங்களூரு :
கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா விழா கடந்த 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு விதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவகவுடா, தொடங்கி வைத்தார்.
அப்போது, போட்டியில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து அவரும் ஓடினார். ஆனால், சில நிமிடங்களிலேயே நிலை தடுமாறிய அவர் திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார்.
பின்னர் அருகே இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து அவருக்கு கை கொடுத்து எழுப்பினார்கள். மந்திரி ஒருவர் கீரே விழுந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GTDevegowda