செய்திகள்

குஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்

Published On 2018-10-16 18:42 GMT   |   Update On 2018-10-16 18:42 GMT
குஜராத்தில் தன் 5 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GujaratWomen #Suicide #WellThrow
ஆமதாபாத்:

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவள் நல்ல தங்காள். நவீன நல்லதங்காள், இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. அங்கு பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்து விட்டார். இதைக் கண்ட கிராமவாசிகள் சிலர், காப்பாற்றும் நோக்கத்தில் கிணற்றில் குதித்தனர். ஆனால் அதற்குள் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். கீதா பாலியாவையும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. இறந்த குழந்தைகள் 1½ வயது முதல் 8 வயது வரையிலானவர்கள்.

2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன் என்று கீதா பாலியா போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #GujaratWomen #Suicide #WellThrow 
Tags:    

Similar News