செய்திகள்

சபரிமலை விவகாரம்- சுப்ரீம்கோர்ட் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்த சந்தீபானந்தா கிரி ஆசிரமம் தீவைத்து எரிப்பு

Published On 2018-10-27 06:42 GMT   |   Update On 2018-10-27 06:42 GMT
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை வரவேற்ற சந்தீபானந்தா கிரியின் ஆசிரமம் தீவைத்து எரிக்கப்பட்டது. #Sabarimala
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வகை பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சில பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் கடும் போராட்டம் நடைத்தினார்கள். இதனால் பெண்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி வந்தனர்.

கேரளாவில் உள்ள குண்டாமோங்கடவு அருகில் சுவாமி சந்தீபானந்தா கிரி என்பவர் ‘சலாகிராமம்’ ஆசிரமம் நடத்தி வருகிறது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் இன்று அதிகாலை சுவாமி சந்தீபானந்தா கிரி ஆசிரமத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்தனர். இதில் இரண்டு கார் மற்றும் ஸ்கூட்டர் எரிந்து நாசமாயின. சுவாமி சந்தீப்பானந்தா கிரி ஆசிரமத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜய் சென்று பார்வையிட்டார்.

அப்போது ஆசிரமத்திற்கு தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும், தீவைத்தவர்களின் நோக்கம் ஆசிரமம் அல்ல. சந்தீபானந்தா என்றார்.
Tags:    

Similar News