செய்திகள்

மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - மிரட்டிய வாலிபர் உ.பி.யில் பிடிபட்டார்

Published On 2018-11-03 08:49 GMT   |   Update On 2018-11-03 08:49 GMT
அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய வாலிபரை உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் பிடித்தனர். #UPmannabbed #Miamiairport
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட மாயப்பணமான பிட்காயின்களை வாங்கி சேமித்து வைக்க ஆசைப்பட்டார். இதற்காக இணையத்தளம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் டாலர்களை கொடுத்து ஏமாந்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க புலனாய்வு முகமையான எப்.பி.ஐ.யிடம் இந்தியாவில் இருந்தவாறு புகார் அளித்தார். இவரது புகார்மீது அங்குள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்தார்.



பின்னர், கடந்த மாதம் 2-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிவரை அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள விமான நிலையத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியால் மியாமி விமான நிலையத்தில் அனைவரையும் சுட்டுக் கொல்லப் போவதாகவும் மாறிமாறி மிரட்டி வந்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபரின் கைபேசியை மோப்பம் பிடித்த உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். #UPmannabbed #threatcalls #blowupMiamiairport #Miamiairport

Tags:    

Similar News