செய்திகள்

நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை- பரமேஸ்வரா பேச்சு

Published On 2019-02-25 10:51 GMT   |   Update On 2019-02-25 10:51 GMT
கர்நாடக மாநிலத்தின் துணை முதல் மந்திரி பரமேஸ்வரா , தான் தலித் என்பதாலேயே முதல்வர் ஆக முடியவில்லை என தெரிவித்துள்ளார். #DeputyCMParameswara
தேவநகரி:

கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:

தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன்.  நான் தலித் என்பதால்  தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை. அந்த வாய்ப்பு தலித் என்பதால் நழுவியது. பின்னர் தயக்கத்துடன் துணை முதல் மந்திரி பதவியை விருப்பமின்றி ஏற்றேன்.   இதேபோன்று தலித் காங்கிரஸ் தலைவர்கள் பி. பசவலிங்கப்பா , கே.எச். ரங்கநாத், மற்றும் தற்போதைய மத்திய  அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் இதன் காரணமாகவே முதல்வர் வாய்ப்பை இழந்தனர். இவர்கள் அனைவரும் முதல்வராக தகுதி உள்ளவர்கள். ஆனால் தலித் என்பதாலே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.    

குமாரசாமிக்கு முதல் மந்திரி பதவி அளித்ததில் காங்கிரஸில் சிலர் அதிருப்தியில் இருக்கும் நிலையில் துணை முதல் மந்திரி பரமேஸ்வராவின் இந்த கருத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #DeputyCMParameswara
Tags:    

Similar News