இந்தியா

உத்தரபிரதேசத்தில் மதரசா சட்டம் செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Published On 2024-11-05 07:38 GMT   |   Update On 2024-11-05 07:38 GMT
  • அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
  • உத்தரபிரதேச மதரசா சட்டத்தின் செல்லுபடியை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

புதுடெல்லி:

கடந்த 2004-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான அரசு, மதரசா கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் உத்தரபிரதேச மாநில அரசின் மதரசா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்கே எதிரானது. இந்தச் சட்டம் செல்லாது. எனவே உத்தரபிரதேச மாநிலத்தின் மதரசாக்களில் பயிலும் மாணவர்களை மாநில அரசு வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இவ்வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் உத்தரபிரதேச அரசு அமல்படுத்திய மதரசா சட்டம் செல்லும் என்று தெரிவித்து அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. தீர்ப்பில், சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. உத்தரபிரதேச மதரசா கல்விச் சட்டம் மதச்சார்பின்மைக் கொள்கையை மீறவில்லை.

உத்தரபிரதேச மதரசா சட்டத்தின் செல்லுபடியை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மதச்சார்பின்மையின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக மதரசா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு கூறியது தவறு. இந்த சட்டத்துக்கு சட்டமன்றத் தகுதி இல்லாவிட்டால் சட்டத்தை ரத்து செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News