இந்தியா

13 அடி நீள முதலையை தோளில் சுமந்து சென்ற நபர் - வீடியோ வைரல்

Published On 2024-11-26 14:43 GMT   |   Update On 2024-11-26 14:43 GMT
  • இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முதலைகள் வருவது வழக்கமான நிகழ்வாகும்.
  • கடந்த 3 நாட்களில் மட்டும் 24 முதலைகள் இப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் ஒரு நபர் தனது தோளில் பெரிய முதலையை சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஹமிர்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில வாரங்களாக உலா வந்த முதலையினால் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வனத்துறையினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை பிடித்தனர். பின்னர் முதலையின் வாய் மற்றும் கைகால்களை துணி மற்றும் கயிற்றால் கட்டினர். பின்னர் வனத்துறை அதிகாரி ஒருவர் தனது தோளில் 13 அடி நீள முதலையை தூக்கி கொண்டு வயல்களுக்கு வெளியே கொண்டு சென்றார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர்.

இப்பகுதியில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முதலைகள் வருவது வழக்கமான நிகழ்வாகும். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 24 முதலைகள் இப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News