இந்தியா
பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
- ஜார்க்கண்டில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
- ஆளும் ஜே.எம்.எம். கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
புதுடெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜே.எம்.எம். கட்சி பா.ஜ.க.வை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பதவியேற்பு விழா நவம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனா சோரனுடன் இன்று தலைநகர் டெல்லி சென்றார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.