பான் 2.0 திட்டம்.. பழைய பான் கார்டு செல்லாதா? - மத்திய அரசு விளக்கம்
- பான்.2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி செலவில் வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பான் கார்டு முழுமையாக மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும். பின்னர் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக பான் கார்டு மாற்றப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டுகளை விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பான் கார்டுகள் அப்கிரேடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் வேண்டும் என்றால் மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். அது இலவசமாகவே வழங்கப்படும்.
இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 98 சதவீதம் தனிநபர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.