காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
- ஆந்திரா மாநிலத்தில் மூன்று எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
- மேற்கு வங்கம், ஒடிசா, அரியானா மாநிலங்களில் தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் ஆறு எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் டிசம்பர் 20-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆந்திர பிரதேசத்தில் மூன்று இடத்திற்கும் ஒடிசா, மேற்கு வங்காளம், அரியானா மாநிலங்களில் தலா ஒரு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்து ஆறு பேரும் ராஜினாமா செய்ததால் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
டிசம்பர் 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். டிசம்பர் 13-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடசி நாளாகும்.
ஆந்திர பிரதேசத்தில் வெங்கடரமணா ராவ் மோபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ், ரியாகா கிருஷ்ணையா ஆகியோரும், ஒடிசாவில் சுஜீத் குமாரும், மேற்கு வங்கத்தில் ஜவ்ஹார் சிர்காரும், அரியானாவில் கிருஷ்ணா லா் பன்வாரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.