இந்தியா

அதானி, மருமகன் சாகர் அதானிக்கு எதிராக லஞ்சம் குற்றச்சாட்டு இல்லை : அதானி குழுமம்

Published On 2024-11-27 06:19 GMT   |   Update On 2024-11-27 06:21 GMT
  • அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் புகாரில் ஊழல் அல்லது லஞ்சம் குற்றச்சாட்டு சேர்க்கப்படவில்லை.
  • அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை மீறவில்லை.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான அதானியின் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானது.

அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு பேர் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

சோலார் எனர்ஜி சப்ளை ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததை தெரிவிக்காமல் மறைத்ததன் மூலம் இத்திட்டத்தில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அதானியை கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் அமளியை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதானி, அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இல்லை என் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் தெரிவித்துள்ளது. இதானல் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் அளித்த சிவில் புகாரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படவில்லை என அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் தெரிவித்துள்ளது. இவர்கள் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை மீறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News