இந்தியா

முடா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி வழக்கு: சித்தராமையாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2024-11-05 07:36 GMT   |   Update On 2024-11-05 07:36 GMT
  • முடா நில மோசடி வழக்கை லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சிபிஐ-க்கு மாற்றக்கோரி ரிட் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் பதில் அளிக்க மனு.

கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா மீது முடா நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஆர்.டி.ஐ. ஆர்வலர் சினேகாமயி கிருஷ்ணா கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, அவரது மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, மத்திய அரசு, மாநில அரசு, சிபிஐ, லோக்ஆயுக்தா இதுகுறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

அத்துடன் லோக்ஆயுக்தா இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட பதிவு விசாரணையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையா மனைவியிடம் கடந்த மாதம் 25-ந்தேதி லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News