செய்திகள்

பாகிஸ்தானில் புகுந்து தாக்கிய மிராஜ் விமானத்தின் பெயரை குழந்தைக்கு சூட்டிய தம்பதி

Published On 2019-02-27 23:43 GMT   |   Update On 2019-02-27 23:43 GMT
ராஜஸ்தான் மாநிலம் தாப்ரா கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பாகிஸ்தானில் புகுந்து தாக்கிய மிராஜ் விமானத்தின் பெயரை சூட்டியுள்ளனர். #Miraj2000 #MirajSinghRathore
ஜோத்பூர்:

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் தாப்ரா கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங், சோனம் சிங் தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 3.50 மணிக்கு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்ததால், குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளனர். 
Tags:    

Similar News