இந்தியா
சிவ்பால் சிங்குடன் அகிலேஷ்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சிவ்பால் சிங் கேட்டது 100 தொகுதி: அகிலேஷ் கொடுத்தது ஒரு சீட்

Published On 2022-01-27 02:25 GMT   |   Update On 2022-01-27 02:25 GMT
சமாஜ்வாடிக்கு போட்டியாக சிவ்பால் சிங், ‘பிரகதிஷீல் சமாஜ்வாடி பார்ட்டி லோகியா’ (ஆர்.எஸ்.பி.எல்.) என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் புதிய கட்சியை தொடங்கினார்.
லக்னோ :

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் சிவ்பால்சிங். முலாயம்சிங் யாதவ்வின் சகோதரர். கடந்த 2017-ம் ஆண்டில் இவரை ஒதுக்கி விட்டு மகன் அகிலேஷ் யாதவை கட்சி தலைவராக்கினார் முலாயம் சிங்.

எனவே சமாஜ்வாடிக்கு போட்டியாக சிவ்பால் சிங், ‘பிரகதிஷீல் சமாஜ்வாடி பார்ட்டி லோகியா’ (ஆர்.எஸ்.பி.எல்.) என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் புதிய கட்சியை தொடங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டவருக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இவரது கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தனது கட்சிக்கு 100 தொகுதி ஒதுக்குமாறு அவர் கேட்டிருந்தார். ஆனால் சிவ்பால் சிங்கிற்கு மட்டும் அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜஸ்வந்த் நகர் தொகுதியை மட்டும் அளித்தார் இந்த தொகுதியிலும் அவர் சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்.
Tags:    

Similar News