இந்தியா

உ.பி. அரசை விட ஓநாய்கள் புத்திசாலிகளாக இருக்கின்றன- அமைச்சர் பேபி ராணி மௌரியா

Published On 2024-09-07 05:27 GMT   |   Update On 2024-09-07 05:27 GMT
  • உ.பி.யில் ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
  • உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அவற்றை பிடிப்பது எளிதான காரியமில்லை அம்மாநில பெண் அமைச்சர் பேபி ராணி மவுரியா பேசியுள்ள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் தேடப்பட்டு வருகின்றன. நாங்கள் அவற்றைப் பிடித்து விடுவோம். ஆனால் ஓநாய்கள் அரசாங்கத்தை விட, புத்திசாலித்தனமாக இருப்பதால் பிடிப்பதற்கு நேரம் எடுக்கிறது. வனத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தேடுதலை மேற்பார்வையிட்டு வருகிறார்"என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News