இந்தியா
உ.பி அரசு முன்னேற்றத்தின் மற்றொரு புதிய அத்தியாயத்தை எழுதும்- பிரதமர் மோடி
மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் தனது அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டுகளில் பல முக்கிய மைல் கற்களைக் குறிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யநாத் நேற்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட மெகா விழாவில் யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது முறையாக உ.பி முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
உ.பி முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் தனது அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டுகளில் பல முக்கிய மைல் கற்களைக் குறித்தது.
யோகி ஆதித்யநாத் அரசு தனது புதிய ஆட்சியில் உ.பி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி முன்னேற்றத்தின் மற்றொரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்- மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை