இந்தியா

25 சதவீத இளைஞர்களால் சரளமாக 2-ம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடிவதில்லை- ஆய்வறிக்கையில் தகவல்

Published On 2024-01-18 14:34 GMT   |   Update On 2024-01-18 14:34 GMT
  • 6 முதல் 14 வயது வரையுடைய குழந்தைகளின் கல்வி சேர்க்கை அதிகரிப்பு.
  • 5.6 சதவீத இளைஞர்கள் மட்டுமே தொழில் பயிற்சி சார்ந்த படிப்புகளில் சேர்கின்றனர்.

நாட்டில் மாணவர் சேர்க்கை நிலை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொண்டு இந்த அசெர் அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தாண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-

6 முதல் 14 வயது வரையுடைய குழந்தைகளின் கல்வி சேர்க்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் 96.6 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2014-ல் 96.7 சதவீதமாகவும், 2018-ல் 97.2 சதவீதமாகவும், 2022-ல் 98.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 

14 முதல் 18 வயது வரை உடைய இளைஞர்களில் 86.8 சதவீதம் பேர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுகின்றனர். அவர்களில் 55 சதவீதம் பேர் மானுடவியல் (தத்துவம், ஆன்மிகம், மொழியியல், மொழி, வரலாறு, கலை படிப்புகள்) படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். இதற்கு அடுத்தப்படியாக, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளை, இளைஞர்கள்

'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை பொருத்தவரை ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கை பெறுகின்றனர்.

14 முதல் 18 வயது வரையுடைய இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை அவர்களின் மாநில மொழியில் சரளமாக படிக்க இயலவில்லை.

மேலும், 5.6 சதவீத இளைஞர்கள் மட்டுமே தொழில் பயிற்சி மற்றும் அது சார்ந்த படிப்புகளில் தற்போது சேர்க்கை பெறுகின்றனர்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News