இதுவும் குஜராத் மாடல்தான்.. பதற வைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஆய்வறிக்கை..!
- குஜராத் மாநிலத்தில் 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்.
நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் (44.45 சதவீதம்), நகர்ப்புறங்களில் சுமார் 28.97 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது.
பின்தங்கிய மாநிலங்களாக இருக்கும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்டவை ஊட்டச்சத்து குறைபாடு அளவில் குஜராத் மாநிலத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்பிடித்துள்ளது. இந்த மாநில குழந்தைகளில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களது வயதிற்கு ஏற்ற எடையை விட குறைந்த எடை கொண்டிருக்கின்றனர்.
"ஊட்டச்சத்து மிகுந்த கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. 2016-ம் ஆண்டு மேற்கு வங்காள குடும்பங்களை சேர்ந்த சுமார் 33.6 சதவீதம் பேர், குஜராத் மாநிலத்தில் 41.37 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டுள்ளனர். 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 27.3 சதவீதம் பேரும், குஜராத் மாநிலத்தில் 38.9 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது," என பொருளாதார பேராசிரியர் அட்மன் ஷா தெரிவித்தார்.
இந்த தகவல்களின் படி குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் 100 பேரில் ஆறு பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிதி ஆயோக் தகவல்களின் படி, குஜராத் மாநிலத்தின் 23.30 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. கேரளா, பஞ்சாப மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குஜராத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.
நாடு முழுக்க குஜராத் மாடல் மற்றும் வளர்ச்சி என பல்வேறு தகவல்கள், கருத்துக்கள் வெளியாகி வந்துள்ளன. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.