இந்தியா
ரீமால் புயல் எதிரொலி- கொல்கத்தாவில் 394 விமானங்கள் இயங்காது
- கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்.
வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில், ரீமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச என 394 விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.