இந்தியா

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற ரூ.4 கோடி வாழை இலைகள்

Published On 2024-09-14 05:30 GMT   |   Update On 2024-09-14 05:30 GMT
  • ஒரே வாழை இலையில் அனைத்து உணவுகளும் பரிமாறப்படும்.
  • ஓண விருந்து பரிமாறப்படும் வாலை இலை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சாதி மத பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டியைாக ஓணம் திகழ்கிறது. இந்த விழா நடக்கும் 10 நாட்களும் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் 10-வது நாளில் ஓணம் கொண்டாடப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது நடக்கும் ஓண விருந்து பிரசித்திபெற்றது. இதில் அறுசுவை கொண்ட பலவித உணவுகள் இடம் பெறும்.

ஒரே வாழை இலையில் அனைத்து உணவுகளும் பரிமாறப்படும். ஓண விருந்தில் இடம்பெறும் உணவு பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்குவார்கள். அதேபோன்று ஓண விருந்து பரிமாறப்படும் வாலை இலை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

இதற்காக கேரளாவின பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் சந்தைகளுக்கு வரும். இருந்த போதிலும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் வாழை இலைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டும் வாழை இலைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ரூ.6 கோடி வரை வாழை இலை வர்த்தகம் நடந்துள்ளது. அதில் தமிழகத்திற்கு ரூ.4 கோடி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News