இந்தியா
5 மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் மனுதாக்கல் தொடக்கம்
- வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
- மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனுதாக்கல் கடந்த 13-ந்தேதி நடந்தது. இந்நிலையில் இன்று அந்த மாநிலத்தில் 2-வது கட்ட 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.
அதுபோல மத்திய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இன்று வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.