இந்தியா

கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு - பெங்களூரில் அதிர்ச்சி

Published On 2024-10-08 13:56 GMT   |   Update On 2024-10-08 13:56 GMT
  • ஸ்விக்கியில் ஊழியர் பாலராஜ் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
  • பாலராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு நகரில் கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரியும் பாலராஜ் என்பவர் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜின் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

மேலும் அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஸ்விக்கியின் செய்தித் தொடர்பாளர், "பெங்களூருவில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அணைத்து உதவிகளையும் எங்களது குழுவினர் செய்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு நாங்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். உணவுப் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. ஸ்விக்கி ஆப்பில் உள்ள அனைத்து உணவகங்களும் FSSAI உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News