இந்தியா

பாம்பு கடியால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு- உலகிலேயே இந்தியா தான் முதலிடம்

Published On 2024-07-29 16:25 GMT   |   Update On 2024-07-29 16:25 GMT
  • இந்தியா முழுவதும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி., கேள்வி எழுப்பினார்.
  • பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக பாஜக எம்.பி. கூறினார்.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எம்.பி.க்கள் எழுப்பினர். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி., விவாதத்தின் போது இந்த பிரச்சினையை எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இதனால் 50,000 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஏழ்மை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டையும் தாங்கி வாழும் ஏழ்மையான மாநிலம் பீகார். இந்தியா முழுவதும் 30 முதல் 40 லட்சம் பேரை பாம்பு கடிக்கிறது. அதில், 50,000 பேர் உயிரிழக்கிறார்கள். இது உலகிலேயே அதிகம். பல இறப்புகளைத் தடுக்க முடியும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கம், பாம்புக்கடி சம்பவங்களை அதிகரிக்கிறது. என்றார்.

Tags:    

Similar News