இந்தியா
மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு
- 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடகிழக்கு பகுதி முழுவதிலும் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ இல்லை.
மேகாலயாவில் இன்று இரவு சுமார் 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து தென்கிழக்கே 49 கி.மீ தொலைவில் வங்காளதேச எல்லையில் உள்ள சில்ஹெட் அருகே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடகிழக்கு பகுதி முழுவதிலும், வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் உணரப்பட்டன.
மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.