இந்தூரில் 5,500 கிலோ கலப்பட நெய் பறிமுதல்
- சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
இந்தூர்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலப்பட நெய் உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள ஒரு நிறுவனம் கலப்பட நெய்யை உற்பத்தி செய்துவருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த நிறுவனத்தில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய்களை கலந்து தரமற்ற நெய் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். பின்னர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.