8 ஆண்டுகளில் கேரளாவில் 5,839 பேருக்கு அரசு வேலை
- கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது
- கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது
கேரள சமூக ஆர்வலர் கோவிந்தன் நம்பூதிரி கேரளாவில் 8 ஆண்டுகளில் அரசு சார்பில் மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
தற்போது அவரது மனுவுக்கு அரசு சார்பில் அளித்த பதில் வருமாறு:-
2016 முதல் 2024 வரையிலான 8 ஆண்டுகளில் கேரள மாநில அரசு சார்பில் ரூ.1520.69 கோடி முதலீட்டில் 5,839 பேருக்கு வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டு உள்ளது. கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (KSIDC)வழங்கிய நிதி உதவியால் கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு செய்து ஊக்குவித்துள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில் வர்த்தக இயக்குனரகம் கடந்த 22 மாதங்களில் 2,36,384 நிறுவனங்கள் மூலம் ரூ.14,922 கோடி முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவிந்தன் நம்பூதிரி கூறியதாவது:-
கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. எனவே கேரள மாநில அரசு முன் முயற்சி நடவடிக்கை எடுத்து உடனடியாக வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.