குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 6 பாகிஸ்தானியர் கைது
- குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.
இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.