இந்தியா

பள்ளி அருகே உள்ள மதுக்கடையை மாற்றக்கோரி 6-ம் வகுப்பு மாணவி ஐகோர்ட்டுக்கு கடிதம்

Published On 2024-03-22 06:51 GMT   |   Update On 2024-03-22 06:51 GMT
  • எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
  • மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரம் சாமநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி என்ற மாணவி தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

இதன் அருகே மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சில கல்லூரிகளும் உள்ளன. கோவிலுக்கு பெண்கள் நடந்து செல்கிறார்கள். குடிமகன்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

உடனடியாக மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை பொதுநல மனுவாக எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தெலுங்கானா தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆணையர், உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News