இந்தியா

சல்யூட் அடித்த போலீஸ்... ஒருநாள் ஐபிஎஸ்-ஆன 9 வயது சிறுவன்: வீடியோ

Published On 2024-06-27 08:45 GMT   |   Update On 2024-06-27 08:45 GMT
  • ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
  • போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் அதிகாரியாகும் கனவை வாரணாசி போலீசார் நிறைவேற்றி உள்ளனர்.

9 வயது சிறுவன் ரன்வீர் பார்தி மூளைக்கட்டிக்கு மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இத்தகைய சூழ்நிலையில், ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சிறுவனின் விருப்பம் வாரணாசி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் ரன்வீர் பார்தி விருப்பத்தை வாரணாசி போலீசார் நிறைவேற்றினர். 

போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு மற்ற அதிகாரிகள் கைகுலுக்கி சல்யூட் அடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News