இந்தியா

டாக்டர் ரூவைஸ், டாக்டர் ஷஹானா

கேரள பெண் டாக்டரின் நண்பர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

Published On 2023-12-07 06:54 GMT   |   Update On 2023-12-07 06:54 GMT
  • அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹானா(வயது28). எம்.பி.பி.எஸ். முடித்திருக்கும் இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவு முதுகலை படித்து வந்தார்.

இதற்காக அவர் மருத்து வக்கல்லூரி அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மாணவி ஷஹானா ஆஸ்பத்திரி பணிக்கு வரவில்லை. இதனால் சந்தே கமடைந்த மருத்துவர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு மயங்கிய நிலையில் ஷஹானா கிடந்தார். அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கெண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவர் மயக்க மருந்தை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மாணவி ஷஹானா, டாக்டரான நண்பர் ஒருவரை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துவந்த நிலையில், நண்பரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டதாக வும், அதன் காரணமாக ஷஹானா தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இளம் மருத்துவர் ஷஹானா தனது நண்பரான டாக்டர் ரூவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை வரதட்சணையாக தர வேண்டும் என்று ரூவைஸ் கேட்டிருக்கிறார்.

அதனைக்கேட்டு ஷஹானா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவ்வளவு வரதட்சனை தர ஷஹானாவின் குடும்பத்தினர் முன்வரவில்லை. இதனால் திருமண முடிவில் இருந்து ரூவைஸ் பின்வாங்கியதாக தெரிகிறது. திருணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு மாத காலமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். பின்பு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பிறகு மருத்துவக்கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அதன்பிறகு தான், ஷஹானா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மயக்க மருந்தை அதிகளவில் உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக் கிறார். தற்கொலை செய்வதற்கு முன், தனது தற்கொலைக்காக காரணத்தை கடிதமாகவும் எழுதி வைத்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பெண் டாக்டர் தற்கொலை விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்க எடுக்க மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஷஹானாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து விட்டு ஏமாற்றிய அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் கருநாகப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்த டாக்டர் ரூவைசை போலீசார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் டாக்டர் ரூவைஸ் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டுள்ளார். விசாரணையில் வெளிப் படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அவர் நிக்கப்படடுள்ளதாக மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News