இந்தியா

சமோசா விற்று நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவன்!

Published On 2024-08-30 05:45 GMT   |   Update On 2024-08-30 05:54 GMT
  • சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
  • மருந்துகளை பார்த்ததால் மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது.

நொய்டா:

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சன்னிகுமார் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.

டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அவர் 664 மதிப்பெண் எடுத்துள்ளார். தனது சமோசா கடையில் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர் இந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.

அவர் நீட் தேர்வு குறிப்புகளை பேப்பரில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். நீட் தேர்வுக்காக அவர் இரவு முழுவதும் கண்விழித்து படித்துள்ளார்.

இதனால் அவரது கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.

மருந்துகளை பார்த்ததால் எனக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். சமோசா விற்பது எனது எதிர்காலத்தை பாதிக்காது தொடர்ந்து இந்த தொழிலை செய்து கொண்டே டாக்டருக்கு படிப்பேன் என்று கூறியுள்ளார்.

சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தை கவனித்து வந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவ கல்லூரி கட்டணமான ரூ.6 லட்சம் நிதியை அவருக்கு வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News