இந்தியா

ஏசர், அசுஸ் டெக் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்புகளை விரைவில் தொடங்க திட்டம்

Published On 2024-02-08 08:56 GMT   |   Update On 2024-02-08 08:56 GMT
  • கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
  • இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த 'ஏசர்' மற்றும் 'அசுஸ்' உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தைவானின் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து ஏசர் தலைவர் ஜேசன் சென் கூறும் போது, "இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்."

 


"எங்களது ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அதிகப்படியான கம்ப்யூட்டர், லேப்டாப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தை மிகவிரைவாக விரிவடைந்து வருகிறது. ஆனாலும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது."

"இந்தியாவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிளி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. எனவே புதிதாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். மேலும் நேரடியாக தொழில் தொடங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது."

"இதன் காரணமாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் டெக் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News