இந்தியா

தெலுங்கானாவில் நாளை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணி

Published On 2024-11-05 01:28 GMT   |   Update On 2024-11-05 01:30 GMT
  • நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
  • 85 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள், அறிவார்ந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அவர்களுடைய கருத்துகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1993-ம் சட்டத்தின்படி இதற்கு முன் கல்வி, வேலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சாதியினரின் சமூகப் பொருளாதார விவரங்களை சேகரிக்கும்.

இந்த பணியில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இரக்கிறார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் தொடக்க பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும். ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தரவுகளை பெறுவார்கள். சமூகம், கல்வி, வேலை, பொருளாதாம், அரசியல் போன்ற தரவுகளை சேகரிப்பாளர்கள். மொத்தமாக 85 ஆயிரம் பணியில் ஈடுபடுத்தபட இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதியை உறுதி செய்வதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News