இந்தியா

ஏஐ ரேசில் பின்தங்கிய இந்திய நிறுவனங்கள் - காரணம் என்ன தெரியுமா?

Published On 2024-07-31 05:41 GMT   |   Update On 2024-07-31 05:41 GMT
  • ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
  • ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்கும் நிறுவனங்களாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளன. எனினும், ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வதில் இரு நிறுவனங்களும் பின்னடைவில் இருப்பதாக இன்ஃபர்மேஷன் சர்வீஸ் குரூப் (ஐஎஸ்ஜி) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2024 ஜூன் மாதத்திற்கு முந்தைய 12 மாத காலங்களில் ஏஐ சார்ந்த சுமார் 2250 திட்டங்களில் அக்சென்ச்சர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே காலக்கட்டத்தில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 300 மற்றும் 200 ஏஐ சார்ந்த திட்டங்களை கைப்பற்றி இருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு என்ப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பாக தகவல்கள் தான் ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

 


அதன்படி அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1000 ஏஐ திட்டங்களை முடித்துள்ளது. ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வது தொடர்பாக முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்கள் பட்டியலில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப் மற்றும் கேப்ஜெமினி எஸ்இ உள்ளிட்டவை முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

புதிய தொழில்நுட்பங்களை முன்கூட்டியே பயன்படுத்த துவங்கியது மற்றும் போட்டியில் அதிகவனம் செலுத்துவது உள்ளிட்டவை தான் அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் அதிகளவு ஏஐ திட்டங்களை கைப்பற்றுவதற்கு காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

"ஏஐ சார்ந்த திட்டங்களில் முன்கூட்டியே ஆர்வம் காட்டுவதன் மூலம் அதிக திட்டங்களை கைப்பற்றவோ அல்லது அதிக திட்டங்களில் பணியாற்றவோ முடியும். சர்வதேச நிறுவனங்கள் முன்கூட்டியே இதுதொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதன் விளைவு தான், அவர்கள் இத்தனை திட்டங்களை பெறுவதற்கு முக்கிய காரணம்," என்று கான்ஸ்டெலேஷன் ரிசர்ச் நிறுவனர் ரே வாங் தெரிவித்தார்.

Tags:    

Similar News