இந்தியா

இந்தியா - வங்காளதேசம் இடையே விமான சேவை ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு

Published On 2024-08-06 02:48 GMT   |   Update On 2024-08-06 02:48 GMT
  • தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்தது.
  • மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியது.

வங்காளதேசத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பொக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக டாக்கா மற்றும் இந்தியா இடையில் திட்டமிடப்பட்ட எங்களது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளது.

வங்காளதேசத்தில் நிலவும் கள சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

முன்னதாக ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியது. போராட்டத்தின் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதைத் தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகனாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுக்க போராட்டக்காரர்கள் அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைகாட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்க அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News