வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் விமான நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி இழப்பு
- இதுவரை 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- வெடிகுண்டு புரளி அச்சுறுத்தல்களால் விமான அட்டவணைகள் சீர்குலைகிறது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்களால் விமானம் திசைதிருப்பப்படும் சந்தர்ப்பங்களில் எரிபொருள் பயன்படு அதிகரிக்கிறது. பின்னர் விமானத்தை மீண்டும் பரிசோதிக்கவும், பயணிகளை ஓட்டல்களில் தங்கவைக்கவும், பயணிகளை அவர்கள் பயணம் செய்யவுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதால், செலவும் அதிகரிக்கிறது.
விமான நிறுவனங்கள் அவசரமாக தரையிறங்கும் போது, சம்பந்தப்பட்ட விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணத்தையும் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.