இந்தியா
முன்னாள் மந்திரி கொலையை எதிர்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்- அஜித் பவார் வலியுறுத்தல்
- கொலை வழக்கை விசாரிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் கூறியதாவது:-
எங்களது நண்பரான பாபா சித்திக்கை இழந்ததில் நாங்கள் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றோம். இந்த விஷயத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மற்ற மாநிலங்களுக்கு இந்த குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பாரதிய ஜனதா எம்.பி. பிரவீன் கண்டேல்வால் கூறும்போது, 'இந்த கொலை சம்பவம் வருத்தம் அளிக்கிறது'. மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளது. இதை விட வேறு யாரும் வேகமாக செயல்பட முடியாது. ராகுல் காந்தியும், வேறு சிலரும் இது போன்ற சம்பவங்களில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.