இந்தியா

கம்பேக் என்பதற்கான வாய்ப்பே இல்லை: அகிலேஷ் யாதவுக்கு உ.பி. கேஷவ் பிரசாத் மவுரியா பதிலடி

Published On 2024-07-17 12:39 GMT   |   Update On 2024-07-17 12:39 GMT
  • யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது.
  • பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக-வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

இதற்கு அம்மாநில துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளார். "மத்தியிலும், உத்தர பிரதேசத்திலும் அரசாங்கத்தையும், அமைப்பையும் பாஜக வலுவாக கொண்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு (கம்பேக்) வர வாய்ப்பே இல்லை" என கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் "யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுடைய ஊழல் பற்றி மக்களுக்கு தெரிந்துள்ளது. அவர்களுடைய பதவி விளையாட்டால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்" என கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக பேசும்போது "பாஜக மற்ற கட்சிகளை பிரிக்கும் வேலையை செய்தது. தற்போது தங்களுக்குள்ளேயே அதை செய்து வருகிறது. உட்கட்சி பூசலால் புதை மணலில் மூழ்கி வருகிறது. பாஜக-வை சேர்ந்த ஒருவர் கூட மக்களை பற்றி சிந்திக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசும்போது "அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது. அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது" எனக் கூறினார். இதை மேற்கொள்காட்டி அகிலேஷ் யாதவ் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News