இந்தியா
இந்தியா 'இந்து தேசம் அல்ல' என்று தேர்தல் முடிவு காட்டுகிறது- அமர்த்தியா சென்
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை கொண்டுள்ளது.
- இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவது சரி என்று நான் கருதவில்லை.
கொல்கத்தா:
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது பூர்வீகம் கொல்கத்தா ஆகும். அவர் அவ்வப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சிப்பது வழக்கம்.
தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து கொல்கத்தா வந்துள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை கொண்டுள்ளது.
இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவது சரி என்று நான் கருதவில்லை. இந்தியா, 'இந்து தேசம் அல்ல' என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.