மாநிலங்களவையில் அமித் ஷாவுக்கு எதிராக கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்
- அவையின் முன்னிலையில் எந்தவொரு தவறான நடத்தையோ அல்லது பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதோ உரிமை மீறல்.
- அவையில் கூறிய கருத்துகள் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்ளது.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்சனை தொடர்பாக இரண்டு நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தள்ளார்.
அந்த நோட்டீஸில் "மாநிலங்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 188-ன் கீழ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான சிறப்புரிமை கேள்விக்கான அறிவிப்பை இதன் மூலம் நான் அளிக்கிறேன்.
அவையின் முன்னிலையில் எந்தவொரு தவறான நடத்தையோ அல்லது பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதோ அல்லது அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதோ அவையின் சிறப்புரிமை மீறல் மற்றும் அவமதிப்புக்குக் காரணமாகும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது அவமதிக்கும் செயல். அவையில் கூறிய கருத்துகள் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.