இந்தியாவில் குடியேற 3 காரணங்களை கூறிய அமெரிக்க பெண்
- அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது.
- பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம்.
வசதியான வாழ்க்கை, படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களால் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் அங்கிருந்து வெளியேறி கடந்த 2022-ம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வருகிறார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் டெல்லியில் குடியேற முக்கிய 3 விஷயங்களை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு இங்குள்ள இடங்கள் மிகவும் பிடித்து போனது. இதனால் டெல்லியில் குடியேற முடிவு செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
அமெரிக்காவில் எல்லாமே சுயமானதாக இருக்கும். சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை பின்பற்றப்படுகிறது. சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் அங்கு வறட்சி உள்ளது. அங்கு யாரும் பிறருக்கு உதவ முன்வரமாட்டார்கள். இந்தியாவில் வாழ்க்கை முறை வண்ணமயமாக உள்ளது. இங்கு தனிமையை உணரமாட்டீர்கள். மக்கள் ஓடோடி வந்து உதவுகிறார்கள்.
2-வதாக இங்கு என் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என உணர்கிறேன். அமெரிக்காவில் பெற முடியாத சமூக வாழ்க்கை முறை, கலாச்சாரம், அனுபவங்கள் இங்கு என் குழந்தைகளுக்கு கிடைக்கும். பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம். நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். ஆனால் அது எந்த வகையிலும் சரியான இடம் அல்ல என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.