இந்தியா

பயத்தில் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக் கொண்ட மாற்றுத் திறனாளி.. போலீஸ் கஸ்டடியில் விபரீதம்

Published On 2024-06-11 04:02 GMT   |   Update On 2024-06-11 04:17 GMT
  • மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
  • பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்

ராஜஸ்தானில் போக்ஸோ வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருந்த நபர் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 35 வயதான அப்துல் வாசித் என்னும் மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு, தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த அப்துல் வாசித், காவல் நிலைய கழிவறைக்குச் சென்று தனது பையில் வைத்திருத்த கூர்மையான பொருளை வைத்து தனது பிறப்பு உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

போலீஸ் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News