இந்தியா

மா இலையில் ராமர் கோவில் ஓவியம்: ஆந்திர கலைஞர் சாதனை

Published On 2024-01-19 06:04 GMT   |   Update On 2024-01-19 06:04 GMT
  • அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
  • சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வடதா ராகுல் பட்நாயக் (வயது 35) ஓவியக் கலைஞரான இவர் ஒரு மென்மையான மா இலையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

அதில் ஒரு பகுதியில் ராமர் மற்றும் சீதை மறுபுறம் அனுமான் உருவங்கள் உள்ளன.

இது ஒரு புகைப்படம் போல தத்ரூபமாக காட்சியளிக்கிறது. 4 மணி நேரம் உன்னிப்பாக முயற்சி செய்து இந்த படத்தை வரைந்தார். இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்படுவதால் தனது பக்தியை வெளிப்படுத்தும் நோக்கமாக இதனை வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.

இவர் அரிசி மற்றும் பறவைகளின் இறகுகளில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சீனிவாசா திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

Tags:    

Similar News